தற்கொலை செய்துகொண்ட சென்னை ஐ.ஐ.டி. மாணவியின் தந்தை கேரள முதல்வருடன் சந்திப்பு


தற்கொலை செய்துகொண்ட சென்னை ஐ.ஐ.டி. மாணவியின் தந்தை கேரள முதல்வருடன் சந்திப்பு
x
தினத்தந்தி 12 Nov 2019 9:11 PM GMT (Updated: 12 Nov 2019 9:11 PM GMT)

தற்கொலை செய்துகொண்ட சென்னை ஐ.ஐ.டி. மாணவியின் தந்தை கேரள முதல்வரை சந்தித்தார். அந்த சந்திப்பில் நேர்மையான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தார்.

திருவனந்தபுரம்,

சென்னை ஐ.ஐ.டி.யில் முதலாம் ஆண்டு படித்துவந்த கேரள மாணவி பாத்திமா லத்தீப் (வயது 18) 3 நாட்கள் முன்பு தனது விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் நேற்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது அவர், தனது மகள் தற்கொலைக்கான காரணம் குறித்து நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

பின்னர் அப்துல் லத்தீப் நிருபர்களிடம் கூறும்போது, “பாத்திமா நன்றாக படிக்கும் புத்திசாலி மாணவி. அவர் சரியாக படிக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்துகொண்டதாக கூறுவது முட்டாள்தனமானது. தமிழ்நாடு போலீசார் காரணத்தை மறைக்கப்பார்க்கிறார்கள். அவரது செல்போனை எங்களிடம் ஒப்படைக்கவில்லை. இதில் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர், தமிழக முதல்-அமைச்சர் உள்பட பலருக்கும் மனு அனுப்பியுள்ளோம்” என்றார்.

Next Story