கேரளாவில் கார் மீது அரசு பஸ் மோதல்; தம்பதி பலி
கேரளாவில் கார் மீது அரசு பஸ் மோதியதில் தம்பதி பலியாகினர்.
பாலக்காடு,
கேரள மாநிலம் நெய்யாற்றின்கரா அருகே உள்ள ஊராட்டுகாலாவை சேர்ந்தவர் ராகுல் எஸ்.நாயர் (வயது 28). இவரது மனைவி சவுமியா (24). இவர்களுக்கு இஷானியா (2) என்ற பெண் குழந்தை உள்ளது. ராகல் எஸ்.நாயர் திருவனந்தபுரம் அருகே உள்ள காஞ்சிரங்குளத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக வேலைபார்த்து வந்தார்.
கணவன்-மனைவி இருவரும், தங்களது குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு திருவனந்தபுரம் அருகே உள்ள மையநாடு பகுதியில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றனர். பின்னர் திருமணம் முடிந்து ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இவர்களது கார் நெய்யாற்றின்கரா அருகே உள்ள கடம்பாடகுளம் பகுதியில் வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ராகுலும், சவுமியாவும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story