தேசிய செய்திகள்

முதல்வர் பதவி உள்பட பல்வேறு நிபந்தனைகள்- சிவசேனாவுக்கு தேசியவாத காங்.கெடுபிடி + "||" + Chief Minister's Job Among NCP's Conditions For Partnering Sena: Sources

முதல்வர் பதவி உள்பட பல்வேறு நிபந்தனைகள்- சிவசேனாவுக்கு தேசியவாத காங்.கெடுபிடி

முதல்வர் பதவி உள்பட பல்வேறு நிபந்தனைகள்- சிவசேனாவுக்கு  தேசியவாத காங்.கெடுபிடி
கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முதல்வர் பதவி வேண்டும் என்பன போன்ற பல்வேறு நிபந்தனைகளை தேசியவாத காங்கிரஸ் சிவசேனாவுக்கு விதித்துள்ளது.
மும்பை, 

மராட்டியத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு நேற்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.  இருப்பினும்,  சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது பெரும் கட்சியாக வந்த சிவசேனா  தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, தேசியவாத காங்கிரஸ் தரப்பு, முதல்வர் பதவியிலும் பங்கு கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவசேனாவுடன் ஒப்பிடும்போது, வெறும் 2 இடங்களைத்தான் தேசியவாத காங்கிரஸ் குறைவாக பெற்றுள்ளது என்பதைக் கணக்கில் கொண்டுதான், முதல்வர் பதவி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் பதவியில் பங்கு கேட்டு தான், பாஜக-வுடன் மோதலில் ஈடுபட்டு, கூட்டணியையும் முறித்தது சிவசேனா. தற்போது அந்தக் கட்சிக்கும் அதே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதால் திரிசங்கு நிலையில் சிவசேனா சிக்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை மசோதா : காலையில் விமர்சனம், மாலையில் ஆதரவு- சிவசேனா அந்தர் பல்டி!!
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக சிவசேனா சாம்னாவில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தது.
2. ‘உத்தவ் தாக்கரே அரசுக்கு மோடி ஒத்துழைக்க வேண்டும்’ சிவசேனா சொல்கிறது
மராட்டியம் டெல்லிக்கு அடிமை அல்ல என்று கூறி இருக்கும் சிவசேனா, உத்தவ் தாக்கரே அரசுக்கு பிரதமர் மோடி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளது.
3. புதிய கூட்டணி அரசின் வழிகாட்டி சரத்பவார்: சிவசேனா புகழாரம்
மராட்டிய வளர்ச்சி முன்னணி உருவாக்கிய புதிய கூட்டணி அரசின் வழிகாட்டி சரத்பவார் என சிவசேனா புகழாரம் சூட்டி உள்ளது.
4. 20 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனா தலைமையில் மீண்டும் கூட்டணி அரசு மலர்கிறது
மராட்டியத்தில் 20 ஆண்டுக்கு பிறகு மீண்டும் சிவசேனா தலைமையில் கூட்டணி அரசு மலர்கிறது.
5. இந்துத்வா கொள்கை சோனியாவிடம் தலைவணங்குகிறது; தேவேந்திர பட்னாவிஸ் கடும் தாக்கு
சிவசேனாவின் முதல்-மந்திரி பதவி ஆசைக்காக இந்துத்வா கொள்கை சோனியா காந்தியிடம் தலைவணங்குகிறது என்று தேவேந்திர பட்னாவிஸ் கடுமையாக தாக்கினார்.