தேசிய செய்திகள்

தாக்கரே குடும்பத்தில் இருந்து யாரும் முதல்வராக கூடாது; ஆதரவு வழங்க காங்கிரஸ் நிபந்தனை + "||" + Maharashtra impasse: No CM from Thackeray family, demands Congress

தாக்கரே குடும்பத்தில் இருந்து யாரும் முதல்வராக கூடாது; ஆதரவு வழங்க காங்கிரஸ் நிபந்தனை

தாக்கரே குடும்பத்தில் இருந்து யாரும் முதல்வராக கூடாது; ஆதரவு வழங்க காங்கிரஸ் நிபந்தனை
மராட்டியத்தில் அரசு அமைக்க தனது ஆதரவை வழங்குவதற்கு மூன்று நிபந்தனைகளை காங்கிரஸ் விதித்து உள்ளது.
புதுடெல்லி,

மராட்டிய மாநிலத்தில் பா.ஜனதாவுடன் விரிசல் ஏற்பட்டதும், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஆனால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கடிதம் கிடைக்காததால் சிவசேனாவால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

இந்தநிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதில் கொள்கை ரீதியில் எதிரெதிர் துருவமான சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என காங்கிரஸ் தலைவர்கள் ஒருசிலர் கருத்து தெரிவித்ததாகவும், இதனை காங்கிரஸ் தலைமை தீவிரமாக பரிசீலனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என கடைசி நேரத்தில் சரத்பவார், சோனியா காந்தியை போனில் தொடர்பு கொண்டு கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மராட்டியத்தில் அரசு அமைக்க  தனது ஆதரவை வழங்குவதற்கு  மூன்று நிபந்தனைகளை காங்கிரஸ் விதித்து உள்ளது.

முதல்வராக தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும்  இருக்கக்கூடாது என்றும் மூன்று கட்சிகளும் பொதுவான குறைந்தபட்ச திட்டத்தில் உடன்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரி உள்ளது.

மேலும் காங்கிரஸ் தனது எம்.எல்.ஏ.க்களுக்கு நான்கு அமைச்சர்கள் ஒதுக்கப்படவேண்டும் என்றும் சட்டமன்ற சபாநாயகர் பதவி வேண்டுமென்றும் கூறி உள்ளது.

ஆதாரங்களின்படி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த  கூட்டணிக்கு ஆதரவாக இல்லை. ஆனால் அசோக் சவான், பிருதிவிராஜ் சவான் மற்றும் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சமாதானப்படுத்தி உள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் அதிகபட்ச எண்ணிக்கையானது வெளியில் இருந்து ஆதரவுக்குப் பதிலாக அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிவசேனா ஓட்டுநர் இருக்கையில் இருக்கும் ஒரு கார் போல கூட்டணி இருக்க வேண்டும், பிரேக்கை காங்கிரஸ் கட்டுப்படுத்தும். அதே வேளையில்  தேசியவாத காங்கிரசிற்கும்  முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என விரும்புகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்: காங்கிரசை கிண்டல் செய்த பா.ஜனதா
ப.சிதம்பரம் ஜாமீனில் வெளிவந்தது குறித்து பா.ஜனதா, காங்கிரசை கிண்டல் செய்துள்ளது,
2. மராட்டிய கூட்டணி அரசில் துணை முதல்-மந்திரி பதவி வேண்டும்; காங்கிரஸ் திடீர் கோரிக்கை
மராட்டிய கூட்டணி அரசில் தங்கள் கட்சிக்கு துணை முதல்-மந்திரி பதவி வேண்டும் என்று காங்கிரஸ் திடீர் கோரிக்கை வைத்து உள்ளது.
3. சாலையை சீரமைக்க கோரி காங்கிரசார் உண்ணாவிரதம்
குலசேகரம் அருகே சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
4. நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெறுவோம் : சோனியா காந்தி
நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
5. எங்களிடம் 162 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் ; இன்று இரவு ஓட்டலில் அணிவகுக்கிறோம் -சஞ்சய் ராவத்
தங்களுக்கு போதுமான பலம் இருப்பதாக கவர்னரிடம் நிரூபிக்கும் வகையில் இன்று 162 எம்.எல்.ஏக்கள் ஓட்டலில் அணிவகுப்பு நடத்துகின்றனர் என சஞ்சய் ராவத் கூறினார்.