சபரிமலை தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு- நாளை தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம் + "||" + Supreme Court to pronounce its judgement tomorrow on review petitions against the verdict allowing entry of women of all age groups into the #Sabarimala temple.
சபரிமலை தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு- நாளை தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம்
சபரிமலை அய்யப்பன் கோவில் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
புதுடெல்லி,
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சபரிமலை கோவிலுக்கு செல்லும் உரிமை அனைத்து வயது பெண்களுக்கும் உள்ளது என தீர்ப்பளித்தது.
தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. இந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், நாளை (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.