டெல்லியில் ஜனாதிபதியுடன் இளவரசர் சார்லஸ் சந்திப்பு


டெல்லியில் ஜனாதிபதியுடன் இளவரசர் சார்லஸ் சந்திப்பு
x
தினத்தந்தி 13 Nov 2019 7:19 PM GMT (Updated: 13 Nov 2019 7:19 PM GMT)

டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இளவரசர் சார்லஸ் சந்தித்தார்.

புதுடெல்லி,

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.

டெல்லியில் நேற்று அவர் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், “இந்தியாவும் இங்கிலாந்தும் வரலாற்று உறவுகள், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பன்முக கலாசார சமூகம் ஆகியவற்றால் பிணைக்கப்பட்ட இயற்கையான கூட்டாளிகள்” என குறிப்பிட்டார்.

“உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடுகளாக, நம் இரு நாடுகளும் இன்று உலகம் சந்திக்கிற சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கு இணைந்து பங்கு அளிக்க நிறைய உள்ளது” என்றும் கூறினார்.

காமன்வெல்த் அமைப்பின் தலைவராக தேர்வு பெற்றதற்காக இளவரசர் சார்லசுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகையில் உள்ள மூலிகை தோட்டத்தில் ஆயுர்வேத மருத்துவத்துக்கு உதவுகிற சம்பா மரக்கன்றை இளவரசர் சார்லஸ் நட்டார்.


Next Story