அயோத்தி வழக்கில் எதிர் மனுதாரர் மாரடைப்பால் மரணம்


அயோத்தி வழக்கில் எதிர் மனுதாரர் மாரடைப்பால் மரணம்
x
தினத்தந்தி 14 Nov 2019 1:26 AM IST (Updated: 14 Nov 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தி வழக்கில் எதிர் மனுதாரராக இருந்த ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

அம்பேத்கர்நகர்,

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கில் எதிர் மனுதாரராக இருந்தவர், ரமேஷ் சந்திர திரிபாதி. 84 வயதான திரிபாதி, இந்த வழக்கில் 17-வது எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு இருந்தார்.

இந்த வழக்கில் கடந்த 9-ந்தேதி வழங்கப்பட்ட தீர்ப்பைக்கேட்டு திரிபாதி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அன்று முழுவதும் மிகுந்த உணர்ச்சி வசத்துடன் காணப்பட்ட அவருக்கு நேற்று முன்தினம் காலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல் அயோத்தியின் சரயு நதிக்கரையில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ராணுவ அமைச்சகத்தில் ஆடிட்டராக பணியாற்றி ஓய்வுபெற்ற திரிபாதி, ஏராளமான ஆன்மிக புத்தகங்களை எழுதியுள்ளார்.


Next Story