65 நாடுகளில் 265 போலி செய்தி இணையதளங்கள் இந்தியாவின் செல்வாக்கான நெட்வொர்க்குகளால் நிர்வகிக்கப்படுகிறது
இந்தியாவின் செல்வாக்கான நெட்வொர்க்குகளால் 65-க்கும் மேற்பட்ட நாடுகளில் 265 போலி செய்தி இணையதளங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன என ஆய்வில் தெரிய வருகின்றன.
புதுடெல்லி,
அமெரிக்கா, கனடா, பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஜெனீவா உள்ளிட்ட 65 நாடுகளில் 265 போலி உள்ளூர் செய்தி இணைய தளங்கள் இந்தியாவின் செல்வாக்கான நெட்வொர்க்குகளால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த இணைய தளங்கள் சர்வதேச நிறுவனங்களில் செல்வாக்கு செலுத்துவதோடு, பாகிஸ்தானைப் பற்றிய பொதுக்கருத்துக்களை தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என ஐரோப்பிய ஒன்றிய டிஸின்ஃபோலாப் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.
இந்த இணையதளங்களில் பெரும்பாலானவை, பழைய உள்ளூர் பத்திரிகைகள் அல்லது உண்மையான ஊடகங்களை ஏமாற்றி, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா மற்றும் இன்டர்ஃபாக்ஸ் போன்ற பல செய்தி நிறுவனங்களின் உள்ளடக்கத்தை மீண்டும் வெளியிடுகின்றன.
கூடுதலாக, இந்த இணையதளங்கள் இந்தியா சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் மற்றும் இந்தியாவின் செல்வாக்கான இணையதளங்களில் உள்ள பாகிஸ்தான் எதிர்ப்பு உள்ளடக்கத்தினை வழங்கி வருகின்றன.
இந்த இணையதளங்களில் பெரும்பாலானவை ட்விட்டர் கணக்கையும் கொண்டிருக்கின்றன. இந்த போலி ஊடகங்கள் "சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் குறிப்பிட்ட நிகழ்வுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளன" என்று டிஸின்ஃபோலாப் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
மேலதிக ஆய்வில் "வணிகத்தில் 35 ஆண்டுகளை நெருங்கி வரும்" ஒரு ஆன்லைன் "செய்தித்தாள்", டைம்ஸ்ஆஃப்ஜெனீவா.காம், ஐரோப்பிய யூனியன் டுடே போன்ற உள்ளடக்கத்தைக் இது கொண்டுள்ளது. காஷ்மீர் மோதலில் பாகிஸ்தானின் பங்கை விமர்சிக்கும் நிகழ்வுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை உள்ளடக்கிய வீடியோக்களை உருவாக்குகிறது என்று ஐரோப்பிய ஒன்றிய டிஸ்னிஃபோலாப் கண்டறிந்து உள்ளது.
Related Tags :
Next Story