தேசிய செய்திகள்

ஆந்திராவில் மணல் பற்றாக்குறைக்கு எதிராக சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டம் + "||" + Chandrababu Naidu launches hunger strike against sand scarcity in Andhra Pradesh

ஆந்திராவில் மணல் பற்றாக்குறைக்கு எதிராக சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டம்

ஆந்திராவில் மணல் பற்றாக்குறைக்கு எதிராக சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டம்
ஆந்திராவில் மணல் பற்றாக்குறைக்கு எதிராக சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார்.
விஜயவாடா,

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களையும் ரத்து செய்து வருகிறது. ஏற்கனவே கிருஷ்ணா நதிக்கரையில் விதிகளை மீறி கட்டியதாக சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான 8 கோடி மதிப்பிலான பிரஜா வேதிகா என்ற சொகுசு பங்களாவை இடித்து தள்ளியது. 

தற்போது மணல் விற்பனை குறித்து கொள்கை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாநிலத்தில் மணல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் செயற்கை மணல் தட்டுப்பாட்டை ஜெகன்மோகன் ரெட்டி அரசு ஏற்படுத்தியுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மணல் தட்டுப்பாட்டினை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் கட்சியினர் விஜயவாடாவில் மணல் மீட்பு  என்ற பெயரில் 12 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

போராட்டத்தில் பேசிய தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறும் போது,

 மணல் தட்டுப்பாடு பற்றி கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு, மோதல் போக்கை கடைபிடிக்கிறது. மணல் தட்டுப்பாடு காரணமாக கூலித் தொழிலாளிகள் முதல் தச்சுத் தொழிலாளிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆந்திராவில் கட்டுமானம் சார்ந்த 125 தொழில்கள் முடங்கிப்போய் உள்ளன. கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 35 லட்சம் தொழிலாளர்களின் வருமானம் கேள்விக்குறியாகிவிட்டது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் தான் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் நடந்த உண்மை சம்பவம்: படமாகும் செம்மர கடத்தல்
ஆந்திராவில் நடந்த செம்மர கடத்தல் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று தயாராக உள்ளது.
2. ஆந்திராவில் தலைநகரங்களை மாற்றும் முடிவு நிறுத்திவைப்பு
ஆந்திராவில் தலைநகரங்களை மாற்றும் முடிவு நிறுத்திவைக்கப்பட்டது.
3. ஆந்திராவில் பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை -புதிய மசோதா நிறைவேற்றம்
பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை வழங்கும் புதிய மசோதா ஆந்திரா சட்டசபையில் நிறைவேறியது.
4. வீட்டு கதவு-ஜன்னலுக்கு ரூ.73 லட்சம் செலவு ஜெகன்மோகன் ரெட்டி குறித்து விமர்சனம்
வீட்டு கதவு-ஜன்னலுக்கு ரூ.73 லட்சம் செலவு செய்து உள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி குறித்து விமர்சனம் எழுந்து உள்ளது.
5. ஆந்திராவில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் குழந்தை பலி
ஆந்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பலியானது.