“குடிகார மன்னர்கள்” என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை


“குடிகார மன்னர்கள்” என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை
x
தினத்தந்தி 16 Nov 2019 1:40 AM IST (Updated: 16 Nov 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

குடிகார மன்னர்கள் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம், மொரேனா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், சபால்கர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பாஜ்நாத் குஷ்வாகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, அவர் மாணவர்களிடம் பேசும்போது, “டெல்லி மன்னர் பிருத்திவிராஜ் சவுகான் மற்றும் அண்டை மாநில மன்னர்கள் சிலர் நமது நாட்டின் தலைசிறந்த மன்னர்களாக திகழ்ந்தனர். ஆனால் தற்போது அவர்களின் கோட்டைகளில் வவ்வால்கள்தான் பறக்கின்றன. அம்மன்னர்களின் பெயர் சொல்லும் அளவிற்கு அவர்களின் வம்சத்தினரும் யாரும் இல்லை. ஏனென்றால் அவர்கள் குடிபழக்கத்திற்கு அடிமையானவர்கள் (சைகையின் மூலம் சொல்கிறார்) மதுவை யாரும் அருந்தக்கூடாது”, என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் ராஜ்னீஷ் அகர்வால் கூறும்போது, “மன்னர்களை அவதூறாக பேசியதன் மூலம், நம் நாட்டின் சிறந்த தலைவர்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்களின் எண்ணம் வெளிப்பட்டு இருக்கிறது” என்றார். இதற்கிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.


Next Story