தேசிய செய்திகள்

மும்பை ஆரே காலனியில் மரங்கள் வெட்ட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தது உச்ச நீதிமன்றம் + "||" + SC extends ban on felling trees in Mumbai's Aarey Colony for Metro car shed project

மும்பை ஆரே காலனியில் மரங்கள் வெட்ட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்

மும்பை ஆரே காலனியில் மரங்கள் வெட்ட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்
மும்பை ஆரே காலனியில் மரங்கள் வெட்ட விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
புதுடெல்லி,

மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ பணிமனை அமைக்க மெட்ரோ ரெயில் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஆரே காலனி வனப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. இது சமூக ஆர்வலர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மரங்கள் வெட்ட எதிர்ப்பு தெரிவித்து, சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் சாா்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுக்களை  மும்பை உயா்நீதிமன்றம் கடந்த அக்டோபரில் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, ஆரே பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதிக்கு மாணவர்கள் குழு  கடிதம் அனுப்பியது.  இந்த கடிதத்தின் அடிப்படையில் இதுகுறித்து தாமாக முன்வந்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. 

இந்த விவகாரம் தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் கடந்த அக்டோபா் 7-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ஆரே காலனியின் மேற்கொண்டு மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். எனினும், அங்கு மெட்ரோ ரயில் பணிமனை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்று நீதிபதிகள் விளக்கமளித்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆரே காலனியில் மரம் வெட்டுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்த நீதிபதிகள், இந்த வழக்கில் டிசம்பா் மாதம் விரிவாக விசாரணை நடைபெறும் என்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது.
2. சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் முறைகேடு வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
3. உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு தினத்தில் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது : மு.க.ஸ்டாலின்
உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு தினத்தில் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம், பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் : தேசியவாத காங்கிரஸ்
தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
5. மராட்டிய அரசியல் விவகாரம்; 3 கட்சிகளின் மனுவை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி காங். உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கை நாளை காலை 11.30 மணிக்கு உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.