தேசிய செய்திகள்

“பழிக்கு பழி வாங்குவோம்” கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல் கடிதம் + "||" + Threat letter to Kerala CM over Maoist killings

“பழிக்கு பழி வாங்குவோம்” கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல் கடிதம்

“பழிக்கு பழி வாங்குவோம்” கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல் கடிதம்
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்து கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வடகரா போலீஸ் நிலையத்திற்கு மாவோயிஸ்டு பெயரில் ஒரு கடிதம் வந்தது. அதனை பிரிந்து பார்த்த இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியடைந்தார்.

வடகரா போலீஸ் நிலையத்திற்கு வந்த கடிதத்தில், கேரள அதிரடிப்படையின் நடவடிக்கையால் தங்களது சகாக்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட  விவகாரத்திற்கு பழிக்குப்பழி வாங்குவோம் என  குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் பேராம்பறை காவல்நிலைய அதிகாரி ஹரீசுக்கு தக்க பாடம்  புகட்டுவோம் என்றும், இந்த கடிதத்தில் மாவோயிஸ்டுகள் மிரட்டல்  விடுத்துள்ளனர். இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.