தேசிய செய்திகள்

ஒடிசாவில் 2 ஆயிரம் கி.மீ. இலக்கை தாக்கி அழிக்கும் இரவு நேர ஏவுகணை பரிசோதனை வெற்றி + "||" + India carries out successful night-time test-firing of Agni-2 ballistic missile

ஒடிசாவில் 2 ஆயிரம் கி.மீ. இலக்கை தாக்கி அழிக்கும் இரவு நேர ஏவுகணை பரிசோதனை வெற்றி

ஒடிசாவில் 2 ஆயிரம் கி.மீ. இலக்கை தாக்கி அழிக்கும் இரவு நேர ஏவுகணை பரிசோதனை வெற்றி
ஒடிசாவில் 2 ஆயிரம் கி.மீ. இலக்கை தாக்கி அழிக்கும் இரவு நேர ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.
பாலசோர்,

ஒடிசாவின் பாலசோர் நகரில் கடலோர பகுதியில் இந்தியாவின் அக்னி 2 ஏவுகணை பரிசோதனை இன்று நடைபெற்றது.  2 ஆயிரம் கி.மீ. தொலைவு கொண்ட இலக்கையும் தாக்கி அழிக்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இரவு நேரத்தில் நடந்த இந்த ஏவுகணை பரிசோதனையானது வெற்றியடைந்து உள்ளது என அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதன்முறையாக அக்னி 2 ஏவுகணையானது கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல் 11ந்தேதி விண்ணில் ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.  அக்னி ஏவுகணை வரிசையில் 700 கி.மீ. தொலைவை தாக்கும் அக்னி 1 ஏவுகணை, 3 ஆயிரம் கி.மீ. தொலைவை சென்றடைந்து தாக்கும் அக்னி 3 ஏவுகணை மற்றும் நீண்ட தொலைவு சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி 4 மற்றும் அக்னி 5 ஏவுகணைகள் அடங்கும்.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை நாடாளுமன்ற தேர்தல்; ராஜபக்சே கட்சி சூப்பர் மெஜாரிட்டி வெற்றி பெற்றது
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சே கட்சி 3ல் 2 பங்கு இடங்களை கைப்பற்றி சூப்பர் மெஜாரிட்டி வெற்றி பெற்றுள்ளது.
2. கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி: சீனாவுக்கு வடகொரிய அதிபர் பாராட்டு
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றுள்ள சீனாவுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
3. 350 தொகுதிகளில் வெற்றி என்று என் கைரேகை சொல்கிறது - அகிலேஷ் யாதவ்
350 தொகுதிகளில் வெற்றி என்று தனது கைரேகை சொல்வதாக, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
4. தேசிய சீனியர் கபடி: தமிழக அணியின் வெற்றி தொடருகிறது
தேசிய சீனியர் கபடி போட்டியில் தமிழக அணியின் வெற்றி தொடர்ந்து வருகிறது.