அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட 3 பேருக்கு நீதிமன்ற காவல்
அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட 3 பேரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
முசாபர்நகர்,
பல நூற்றாண்டுகளாக பிரச்சினையாக தொடர்ந்து கொண்டிருந்த அயோத்தி விவகாரத்தில் கடந்த 9-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அங்கு சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ள அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டு, முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் வழங்க அரசுக்கும் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த சாதிக் மாலிக் என்பவர் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். இதை ஆதரித்து அவரது நண்பர்கள் இருவர் ‘லைக்’ செய்து இருந்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். முசாபர்நகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story