ஜி.எஸ்.டி. வரியை எளிமைப்படுத்துவது பற்றி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் ஆலோசனை
ஜி.எஸ்.டி. வரியை எளிமைப்படுத்துவது பற்றி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
சரக்கு சேவை வரியை (ஜி.எஸ்.டி.) எளிமைப்படுத்துவது மற்றும் விண்ணப்பபடிவத்தை எளிதில் பூர்த்தி செய்வதில் உள்ள குறைபாடுகளை களைவது தொடர்பாக பட்டயகணக்காளர்கள், வர்த்தகர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடனான ஆலோசனை கூட்டத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலாசீதாராமன் நேற்று டெல்லியில் நடத்தினார்.
அந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி.யை தாக்கல் செய்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி தெரிவித்தனர். மேலும் குறிப்பிட்ட நிகழ்கால வருமானத்தை தாக்கல் செய்வது மற்றும் அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் பற்றி கூட்டத்தில் கவலை தெரிவித்தனர்.
அப்போது அவர்களிடம் நிதி மந்திரி, ஜி.எஸ்.டி. வரியை மேலும் எளிமைப்படுத்தவும் குறைகளை களைய உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதுதொடர்பாக நாடு முழுவதும் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந்தேதி முதல் சம்பந்தப்பட்டவர்கள் பங்கேற்கும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும். அதில் அவர்கள் தெரிவிக்கும் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய நடைமுறை செயல்படுத்தப்படும்’ என்றும் கூறினார்.

Related Tags :
Next Story