தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் பலி + "||" + One soldier killed in Jammu and Kashmir blast

ஜம்மு-காஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் பலி

ஜம்மு-காஷ்மீரில் குண்டு வெடிப்பு:  ராணுவ வீரர் பலி
ஜம்மு-காஷ்மீரில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷீரில் உள்ள அக்னூர் மாவட்டத்தில் இன்று இந்திய ராணுவ வீரர்கள் ராணுவ வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. 

இதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த மூன்று ராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மூவரும் உத்தம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக இந்திய ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈராக் நாட்டில் தொடர் குண்டு வெடிப்புகளால் பதற்றம் - 6 பேர் உடல் சிதறி பலி
ஈராக் நாட்டில் தொடர் குண்டு வெடிப்புகளால், 6 பேர் உடல் சிதறி பலியாகினர்.
2. ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
3. சிரியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 குண்டுவெடிப்புகள்; 7 பேர் பலி
சிரியாவில் துருக்கி எல்லைப் பகுதிக்கு அருகே நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 7 பேர் பலியாகினர்.
4. ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; இரண்டு தீவிரவாதிகள் பலி
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் பலியாகினர்.
5. சிரியாவில் குண்டுவெடிப்பு; 8 பேர் பலி
சிரியாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்.