தேசிய செய்திகள்

அயோத்தியில் மசூதி கட்ட நிலம் தர இந்து குடும்பங்கள் விருப்பம் + "||" + Hindu families prefer to build a mosque in Ayodhya

அயோத்தியில் மசூதி கட்ட நிலம் தர இந்து குடும்பங்கள் விருப்பம்

அயோத்தியில் மசூதி கட்ட நிலம் தர இந்து குடும்பங்கள் விருப்பம்
அயோத்தியில் மசூதி கட்ட நிலம் தர இந்து குடும்பங்கள் விருப்பம் தெரிவித்துள்ளது.
அயோத்தி,

அயோத்தியில் மசூதி கட்ட முக்கியமான இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, முக்கியமான இடங்களில் மசூதிக்கான நிலத்தை மாவட்ட நிர்வாகம் தேடி வருகிறது. அவற்றில் சில நிலங்களை பரிசீலனைக்கு தேர்வு செய்துள்ளது.


மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாக்களில் இருந்தும் அறிக்கை கேட்டுள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகள், கிடைத்துள்ள நிலங்களில் மசூதிக்கு பொருத்தமான இடங்களைப் பற்றிய விவரங்களை பட்டியலிட்டு வருகிறார்கள்.

அதே சமயத்தில், அயோத்தியில் வசிக்கும் சில இந்து குடும்பங்கள், மசூதி கட்ட தங்களது நிலத்தை அளிக்க முன்வந்துள்ளன. குறிப்பாக, ராஜ்நாராயணன் தாஸ் என்பவர் ராமஜென்ம பூமியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள தனது 5 ஏக்கர் நிலத்தை தர முன்வந்துள்ளார். இது, மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் யோகி ஆதித்யநாத்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்
2. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி நாளை தொடங்குகிறது
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி நாளை தொடங்க உள்ளது.
3. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
4. அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜையை காணொலி காட்சி மூலம் நடத்தலாமா? - ராமஜென்ம பூமி அறக்கட்டளை பரிசீலனை
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை காணொலி காட்சி மூலம் நடத்துவது குறித்து ராமஜென்ம பூமி அறக்கட்டளை பரிசீலித்து வருகிறது.
5. அயோத்தியில் ராமர் சிலை தற்காலிக கோவிலுக்கு மாற்றப்படுகிறது
அயோத்தியில் உள்ள ராமர் சிலை தற்காலிக கோவிலுக்கு மாற்றப்பட இருப்பதாக அறக்கட்டளை செயலாளர் கூறியுள்ளார்.