நாடாளுமன்ற வளாக பகுதியில் 144 தடை விதிப்பு


நாடாளுமன்ற வளாக பகுதியில் 144 தடை விதிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2019 12:43 PM IST (Updated: 18 Nov 2019 12:43 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற வளாக பகுதியில் மாணவர் அமைப்புகளின் பேரணியை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் விடுதி கட்டண உயர்வை முழுவதும் திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.  இதனை அடுத்து, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் நாடாளுமன்றம் நோக்கி இன்று பேரணியாக புறப்பட்டனர்.  இந்த அமைப்புகள் பேரணியாக சென்று எம்.பி.க்களிடம் முறையிட முடிவு செய்துள்ளனர்.

அவர்களை தடுத்து நிறுத்தும் வகையில் நாடாளுமன்ற வளாக பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  நிலைமையை கண்காணிக்கும் வகையில் பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story