உத்தவ் தாக்கரேயின் அயோத்தி பயணம் திடீர் ரத்து


உத்தவ் தாக்கரேயின் அயோத்தி பயணம் திடீர் ரத்து
x
தினத்தந்தி 18 Nov 2019 7:49 PM GMT (Updated: 18 Nov 2019 7:49 PM GMT)

உத்தவ் தாக்கரேயின் அயோத்தி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

மும்பை,

அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந் தேதி தீர்ப்பு அளித்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து, அயோத்தி நகருக்கு வருகிற 24-ந் தேதி செல்ல உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

தற்போது, மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. இந்தநிலையில், நேற்று உத்தவ் தாக்கரேயின் அயோத்தி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதுபற்றி சிவசேனா தலைவர் ஒருவர் கூறுகையில், மராட்டியத்தில் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இதை கருத்தில் கொண்டு உத்தவ் தாக்கரேயின் அயோத்தி பயணம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அரசியல் கட்சியினர் அயோத்தி செல்வதற்கு பாதுகாப்பு முகமைகள் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இதுவும் உத்தவ் தாக்கரேயின் அயோத்தி பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு ஒரு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story