தாய்-சகோதரி-தம்பி மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த குடிகார வாலிபர் கொலை + "||" + Family kills alcoholic son for repeatedly raping mother, sister, brother's wife
தாய்-சகோதரி-தம்பி மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த குடிகார வாலிபர் கொலை
தாய்-சகோதரி-தம்பி மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த குடிகார வாலிபரை குடும்பமே சேர்ந்து கொலை செய்து உள்ளது.
போபால்,
மத்திய பிரதேசத்தில் சுஷில் ஜாதவ் என்ற 24 வயது இளைஞர் ஒருவரை கொலை செய்ததாக அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். நவம்பர் 12 ஆம் தேதி கோபால்தாஸ் மலைப்பகுதியில் இருந்து சுஷில் ஜாதவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நவம்பர் 12ம் தேதி ஜாதவின் உடல் மீட்கப்பட்டது மற்றும் பிரேத பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டார் என்பது தெரியவந்தது. அவர் அடையாளம் காணப்பட்ட பின்னர், அவர் ஒரு குடிகாரர் என்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை கொலை செய்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக ஜாதவின் தந்தை கல்லு ஜாதவ் மற்றும் அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
குடும்பத்தினரிடம் இது குறித்து விசாரணை நடத்தியபோது தாய், சகோதரி மற்றும் சகோதரனின் மனைவி ஆகியோரை குடிபோதையில் ஜாதவ் , பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனால் சுஷில் ஜாதவை கொலை செய்ததாகவும் கூறினர்.
சுஷில் ஜாதவின் தந்தை கல்லு ஜாதவ் தனது வாக்குமூலத்தில்,
நவம்பர் 11 ம் தேதி சுஷில் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தனது தம்பியின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். அவர், கடந்த காலத்தில் பல முறை இது போல் செய்திருக்கிறார். எனவே இந்த முறை நாங்கள் அவரைக் கொன்று, கோபால்தாஸ் மலையின் அருகே அவரது உடலை போட்டோம் என கூறி உள்ளார்.