தேசிய செய்திகள்

கேரள சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த 12 வயது சிறுமி தடுத்து நிறுத்தம் + "||" + Kerala: Police stops a 12 year old girl from trekking to Sabarimala temple

கேரள சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த 12 வயது சிறுமி தடுத்து நிறுத்தம்

கேரள சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த 12 வயது சிறுமி தடுத்து நிறுத்தம்
கேரள சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த 12 வயது சிறுமி தடுத்து நிறுத்தப்பட்டார்.
திருவனந்தபுரம், 

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலைக்கு சாமி அய்யப்பனை தரிசிக்க பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.  அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக நடுத்தர வயதுடைய பெண்கள் சன்னிதானத்துக்கு வந்தால் பாதுகாப்பு அளிக்க முடியாது என மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அய்யப்பன் கோவிலின் நடை கடந்த சனிக்கிழமை திறக்கப்பட்டது. முதல் நாளில் ரூ.3.30 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி உள்ளது.  கோவிலின் நடை திறந்ததில்  இருந்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலில் தரிசனம்  செய்துள்ளனர்.

இதனிடையே ஆந்திராவிலிருந்து வந்த பக்தர்களின் வாகனத்தை நிலக்கல் பகுதியில் சோதனையிட்ட போலீசார், அதிலிருந்த 2 பெண்களின் வயது குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

அதில் ஒருவர் 30 வயதுடையவர் என்பதும், மற்றொரு பெண் 40 வயதுடையவர் என்பதும் தெரிய வந்ததையடுத்து அவர்களிருவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதேபோன்று கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஒரு சிறுமியிடம் கோவில் அதிகாரிகள், வயது சான்று பற்றிய சோதனையில் ஈடுபட்டனர்.  இதில், அந்த சிறுமிக்கு 12 வயது என தெரிய வந்தது.  இதனால் சிறுமி கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.  அந்த சிறுமி தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் சபரிமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை பெரியகோவிலில் 1 லட்சம் பக்தர்கள் குவிந்தனர் - பலமணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
தஞ்சை பெரியகோவிலில் குடமுழுக்கு நடைபெற்றதையடுத்து பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விடுமுறை தினமான நேற்று 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
2. சபரிமலை கோவில் நகைகளை ஏன் கேரள அரசிடம் ஒப்படைக்கக்கூடாது? - பந்தளம் அரச குடும்பத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
சபரிமலை கோவில் நகைகளை ஏன் கேரள அரசிடம் ஒப்படைக்கக்கூடாது? பந்தளம் அரச குடும்பத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
3. சபரிமலை கோவில் வருமானம் ரூ.100 கோடியை தொட்டது
சபரிமலை கோவில் வருமானம் ரூ.100 கோடியை தொட்டுள்ளது.
4. சபரிமலை கோவிலுக்கு செல்ல அனைத்து வயதினருக்கும் அனுமதி: பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது.
5. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தனி சட்டத்தை உருவாக்க வேண்டும் - கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தனி சட்டத்தை உருவாக்குமாறு கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.