தேசிய செய்திகள்

மம்தா பானர்ஜி தனது அச்சத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்துகிறார்; ஓவைசி கடும் விமர்சனம் + "||" + Mamata Banerjee showing her fear, frustration: Asaduddin Owaisi's reply to West Bengal CM's 'minority extremism' remark

மம்தா பானர்ஜி தனது அச்சத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்துகிறார்; ஓவைசி கடும் விமர்சனம்

மம்தா பானர்ஜி தனது அச்சத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்துகிறார்; ஓவைசி கடும் விமர்சனம்
மம்தா பானர்ஜி தனது அச்சத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்துகிறார் என்று ஓவைசி கடுமையாக சாடியுள்ளார்.
ஐதராபாத், 

மேற்குவங்கம் கூச் பேகர் நகரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "இந்துக்களிடையே தீவிரவாத போக்கு இருப்பதுபோல், சிறுபான்மையினரிடையேயும் தீவிரவாத போக்கு வளர்ந்து வருகிறது. ஐதராபாத்தில் ஒரு அரசியல் கட்சி உள்ளது. அது, பாஜகவிடம் பணம் வாங்கிவிட்டு செயல்படுகிறது" என்றார். 

அசாதுதீன் ஓவைசி தலைமையிலான  ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியை மம்தா பானர்ஜி இவ்வாறு விமர்சித்து இருந்தார்.  இந்த நிலையில்,  மம்தா பானர்ஜிக்கு பதிலடி கொடுத்துள்ள ஓவைசி,   "எங்கள் கட்சி மேற்குவங்கத்தில் வளர்ச்சியடைந்துள்ளது என்பதை என்னை விமர்சிப்பது மூலம் அங்குள்ள இஸ்லாமியர்களிடம் மம்தா தெளிவுப்படுத்தியுள்ளார். அவரின் கருத்து மூலம் மம்தாவின் பயமும் விரக்தியும் வெளிப்பட்டுள்ளது” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ள எதிர்கட்சிகள் கூட்டத்தில் திரிணாமூல் காங். பங்கேற்காது ; மம்தா பானர்ஜி
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஆலோசிக்க நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் திரிணாமூல் காங். பங்கேற்காது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
2. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான முழு அடைப்பிற்கு ஆதரவு இல்லை ; மம்தா பானர்ஜி
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான முழு அடைப்பிற்கு ஆதரவு அளிக்க மாட்டேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
3. உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டை தவறாக வழிநடத்துகிறார் : ஓவைசி பாய்ச்சல்
தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கைதான் தேசிய மக்கள் தொகை பதிவேடு என்று ஐதராபாத் எம்.பி ஓவைசி தெரிவித்துள்ளார்.
4. மம்தா பானர்ஜி தனது கருத்தை திரும்ப பெற வேண்டும்: மே.வங்க ஆளுநர்
குடியுரிமை சட்டம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற மம்தா பானர்ஜி தனது கருத்துக்கு அம்மாநில ஆளுநர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
5. நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும்: மம்தா பானர்ஜிக்கு மே.வங்க ஆளுநர் உத்தரவு
மேற்கு வங்கத்தில் தற்போது எழுந்துள்ள சூழல் குறித்து மம்தா பானர்ஜியை நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு கோரியுள்ளதாக ஆளுநர் ஜெக்தீப் தங்கர் தெரிவித்துள்ளார்.