29-ம் தேதி இந்தியா வருகிறார் கோத்தபய ராஜபக்சே - மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தகவல்
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கோத்தபய ராஜபக்சே 29ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இலங்கை அதிபர் தேர்தல், கடந்த 16-ந் தேதி நடந்தது. இதில் கோத்தபய ராஜபக்சே, 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்நாட்டின் 8-வது அதிபராக பதவி ஏற்றார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி உள்பட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியாவிற்கு வருமாறு கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தநிலையில், மோடியின் அழைப்பை ஏற்று கோத்தபய ராஜபக்சே வரும் நவ.29ஆம் தேதி இந்தியா வர உள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story