தேசிய செய்திகள்

உலகிலேயே குள்ளமான பெண் வீட்டில் கொள்ளை + "||" + House of World's Shortest Woman Jyoti Amge Burgled in Nagpur

உலகிலேயே குள்ளமான பெண் வீட்டில் கொள்ளை

உலகிலேயே குள்ளமான பெண் வீட்டில் கொள்ளை
உலகிலேயே குள்ளமான பெண் வீட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
நாக்பூர்,

உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் ஜோதி அம்கே. 62.8 செ.மீ. உயரம் மட்டுமே உள்ள இவர், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே உள்ள பகத்கன்ஜ் பகுதியில் வசித்து வரும் ஜோதி அம்கே, குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.


நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்தபோது, மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த தங்க மோதிரம் மற்றும் பணத்தை அள்ளிச்சென்றது தெரியவந்துள்ளது. இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...