நாடாளுமன்றத்தில் ஜாலியன்வாலா பாக் நினைவிட மசோதா நிறைவேறியது - அறக்கட்டளையில் இருந்து காங். தலைவர் நீக்கம்


நாடாளுமன்றத்தில் ஜாலியன்வாலா பாக் நினைவிட மசோதா நிறைவேறியது - அறக்கட்டளையில் இருந்து காங். தலைவர் நீக்கம்
x
தினத்தந்தி 19 Nov 2019 10:30 PM GMT (Updated: 19 Nov 2019 9:30 PM GMT)

நாடாளுமன்றத்தில் ஜாலியன்வாலா பாக் நினைவிட மசோதா நிறைவேறியது. அதன் அறக்கட்டளையில் இருந்து காங்கிரஸ் தலைவர் நீக்கப்பட்டார்.

புதுடெல்லி,

கடந்த 1919-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலா பாக்கில் நூற்றுக்கணக்கானோர் ஆங்கிலேய படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் நினைவாக 1921-ம் ஆண்டு, பொதுமக்கள் நிதிஉதவியுடன், ஜாலியன்வாலா பாக் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அதில், காங்கிரஸ் தலைவராக இருப்பவர், அறங்காவலராக இருக்கும்வகையில் விதி உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த அறக்கட்டளையை அரசியல் சார்பற்றதாக ஆக்குவதற்காக, காங்கிரஸ் தலைவரை அறக்கட்டளையில் இருந்து நீக்குவதற்கான திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில், காங்கிரஸ் உறுப்பினர்களின் வெளிநடப்புக்கிடையே நிறைவேறியது.

நேற்று மாநிலங்களவையில், காங்கிரஸ் எம்.பி. பிரதாப்சிங் பஜ்வா, மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் எம்.பி. சுப்பராமி ரெட்டி, தான் கொண்டு வந்த திருத்தத்தை வாபஸ் பெற்றார். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.

இதன்மூலம் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறி விட்டது.


Next Story