மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 155 புள்ளிகள் உயர்வு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 155 புள்ளிகள் உயர்வு
x
தினத்தந்தி 20 Nov 2019 5:43 AM GMT (Updated: 20 Nov 2019 5:43 AM GMT)

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் குறியீடு 155 புள்ளிகள் உயர்ந்தது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் குறியீடு 155.89 புள்ளிகள் உயர்ந்து 40,625.59 புள்ளிகளாக இருந்தது.

மும்பை பங்கு சந்தையில் நேற்று வர்த்தக நிறைவில் சென்செக்ஸ் குறியீடு 185.51 புள்ளிகள் உயர்ந்து 40,469.70 என்ற லாப நோக்குடன் காணப்பட்டது.  இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு நேற்று வர்த்தகம் முடிவடையும்பொழுது, 72.70 புள்ளிகள் உயர்ந்து 11,957.20 புள்ளிகளாக இருந்தன.

ஆற்றல் துறை, மருந்து மற்றும் உள்கட்டமைப்பு பங்குகள் சந்தை மதிப்பில் உயர்ந்து இருந்தன.  அதேவேளையில், தானியங்கி துறை, உலோகம் மற்றும் நுகர்வோர் பங்குகளில் நஷ்டம் காணப்பட்டது.

இந்நிலையில், மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் குறியீடு 155.89 புள்ளிகள் உயர்ந்து 40,625.59 புள்ளிகளாக இருந்தது.

இவற்றில் இன்டஸ்இன்ட் வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுசுகி மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் அதிக லாபத்துடன் காணப்பட்டன.  தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு இன்று 89.65 புள்ளிகள் உயர்ந்து 12,029.75 புள்ளிகளாக இருந்தது.

Next Story