மதங்களுக்கு அப்பாற்பட்டு தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் -மத்திய மந்திரி அமித்ஷா


மதங்களுக்கு அப்பாற்பட்டு தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் -மத்திய மந்திரி அமித்ஷா
x
தினத்தந்தி 20 Nov 2019 8:42 AM GMT (Updated: 20 Nov 2019 8:42 AM GMT)

மதங்களுக்கு அப்பாற்பட்டு தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என மத்திய மந்திரி அமித்ஷா கூறி உள்ளார்.

புது டெல்லி

மாநிலங்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசும் போது கூறியதாவது:-

இந்திய குடிமக்களின் தேசிய பதிவு  (என்.ஆர்.சி) நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும். யாரும், மதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. அனைவரையும் இந்திய குடிமக்களின் தேசிய பதிவின் கீழ் கொண்டுவருவது ஒரு செயல் ஆகும். மதங்களுக்கு அப்பாற்பட்டு தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும்.

வரைவு பட்டியலில் பெயர் இல்லாத நபர்களுக்கு தீர்ப்பாயத்திற்கு செல்ல உரிமை உண்டு. அசாம் முழுவதும் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும். எந்தவொரு நபருக்கும் தீர்ப்பாயத்தை அணுக பணம் இல்லை என்றால், ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துவதற்கான செலவை அசாம் அரசு ஏற்க வேண்டும்.

இந்து, புத்தமதத்தினர், சீக்கிய, சமண, பார்சி அகதிகள் குடியுரிமை பெற வேண்டும். அதனால்தான் குடியுரிமை திருத்த மசோதா தேவைப்படுகிறது,  பாகிஸ்தான், வங்காள தேசம்  அல்லது ஆப்கானிஸ்தானில் மத அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகிறது. அங்கு அகதிகள் இந்திய குடியுரிமை பெற வேண்டும் என கூறினார்.

Next Story