நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண் மேலாளர்கள் கைது


நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண் மேலாளர்கள் கைது
x
தினத்தந்தி 20 Nov 2019 11:20 AM GMT (Updated: 20 Nov 2019 1:10 PM GMT)

நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண் மேலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆமதாபாத்,

குழந்தைகளை கடத்துதல், சட்டவிரோதமாக சிறையில் அடைத்தல் மற்றும் சித்திரவதை செய்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஆமதாபாத் அருகே சுவாமி நித்யானந்தா ஆசிரமத்தின் இரண்டு பெண் மேலாளர்களை ஆமதாபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரைச் சேர்ந்த தம்பதியினர் தங்கள் பெண் குழந்தைகள்  சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்ததையடுத்து ஆசிரமம் மற்றும் மேலாளர்கள் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஆமதாபாத்தில் இருந்து  50 கி.மீ. தூரத்தில் உள்ள ஹிராபூர் கிராமத்தில் உள்ள யோகினி சர்வஜனபீடம் ஆசிரமத்தின் மேலாளர்கள் மா பிரன்பிரியா மற்றும் மா பிரியாதத்வா ஆகியோர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக ஆமதாபாத் போலீசார் தெரிவித்தனர். 

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு கடத்தல் (364) சிறை வைத்தல் (344) காயம் ஏற்படுத்துதல் (323) வேண்டும் என்றே அவமதிப்பது (504) மிரட்டல்  506 (2)  ஆகிய பிரிவுகளின் கீழ் மேலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story