அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி மகளை 12 மணிநேரம் காத்திருக்க வைத்தனர்; பா.ஜ.க. எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி மகளை 12 மணிநேரம் காத்திருக்க வைத்தனர்; பா.ஜ.க. எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 Nov 2019 1:26 AM GMT (Updated: 21 Nov 2019 1:26 AM GMT)

மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி மகளை 12 மணிநேரம் காத்திருக்க வைத்தனர் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

சியோபூர்,

மத்திய பிரதேசத்தின் விஜய்பூர் சட்டசபை தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சீதாராம் ஆதிவாசி.  கர்ப்பிணியான இவரது மகள் கடந்த 18ந்தேதி சியோபூர் நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக கொண்டு செல்லப்பட்டார்.

அந்த மருத்துவமனையில் சீதாராமின் மகளுக்கு பரிசோதனைகள் செய்துள்ளனர்.  பின்னர் சிவ்பூரி அல்லது குவாலியரில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என கூறியுள்ளனர்.  ஆனால் அதற்கான ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வரவில்லை.

அவரது மகளுக்கு உடலில் தண்ணீர் சத்து இல்லை என கூறி அதனால் அறுவை சிகிச்சை செய்தே குழந்தையை வெளியே எடுக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் தனது மகளை தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு சென்றுள்ளார்.  அதன்பின் அறுவை சிகிச்சை இன்றி அவரது மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது.  ஏறக்குறைய 12 மணிநேரம் வரை தன்னை அரசு மருத்துவமனையில் காக்க வைத்து விட்டனர் என அவர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

எனினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள டாக்டர் ஆர்.பி. கோயெல், அவர்கள் காலை 9.30 மணியில் இருந்து இரவு 9 மணிவரை இருந்தனர்.  அவரது மகளுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.  மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர் கேம்பிற்கு சென்றுள்ளார் என்றும் அதனால் இரவிலேயே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என நாங்கள் கூறினோம் என கூறியுள்ளார்.

Next Story