வேலைவாய்ப்பின்மை பா.ஜ.க. ஆட்சியில் தொற்று நோய் போல் உருவெடுத்து உள்ளது; பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு


வேலைவாய்ப்பின்மை பா.ஜ.க. ஆட்சியில் தொற்று நோய் போல் உருவெடுத்து உள்ளது; பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 Nov 2019 6:48 AM GMT (Updated: 21 Nov 2019 6:48 AM GMT)

நாட்டில் பா.ஜ.க. ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை தொற்று நோய் போல் உருவெடுத்து உள்ளது என பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா காந்தி நாட்டின் பொருளாதார நிலையை குறிப்பிட்டு மத்திய அரசை சாடியுள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கான சூழ்நிலை இல்லை.  இது வளர்ச்சிக்கான சக்கரம் சுழலாமல் நின்று விட்டது என்பதற்கான அடையாளம்.

இந்த நோயானது பா.ஜ.க. ஆட்சியின் கீழ் ஒரு தொற்றுநோய் போன்று உருவெடுத்து உள்ளது.  கட்டுமான துறையில் 35 லட்சம் வேலைவாய்ப்புகள் இழந்து போய் விட்டன.  பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் 40 லட்சம் வேலைவாய்ப்புகளை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளன என அவர் குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.

Next Story