தேசிய செய்திகள்

திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி + "||" + Court allows ED to quiz Chidambaram in Tihar on Nov 22, 23

திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி

திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி
திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு 2 நாட்கள் அனுமதி அளித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால்  கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சூழலில், சிதம்பரத்திடம் சில ஆவணங்களை காட்டி விசாரிக்க வேண்டியுள்ளதால், இரண்டு நாட்கள், அவரிடம் விசாரிக்க அனுமதிக்கக் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையிட்டது.

அமலாக்கத்துறையின் முறையீட்டை ஏற்ற டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ப.சிதம்பரத்தை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. வரும் 22  மற்றும் 23 ஆகிய தேதிகளில், திகார் சிறையில் வைத்து ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘நிர்பயா’ குற்றவாளிகளை தூக்கிலிடும் ஊழியர் திகார் சிறை வருகை
‘நிர்பயா’ பாலியல் கொலை வழக்கு குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேரையும் நாளை (சனிக்கிழமை) தூக்கில் போட டெல்லி கோர்ட்டு மரண வாரண்டு பிறப்பித்தது. இதற்கான ஏற்பாடுகள் டெல்லி திகார் சிறையில் நடந்து வருகிறது.
2. கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் மருத்துவமனையில் அனுமதி
கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
3. டெல்லி திகார் சிறையில் டி.கே.சிவகுமாருடன் சோனியா காந்தி சந்திப்பு
டெல்லி திகார் சிறையில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமாரை சோனியா காந்தி சந்தித்து பேசினார்.
4. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் ப.சிதம்பரத்தை கைது செய்தது
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் ப.சிதம்பரத்தை கைது செய்தது.
5. ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனு
ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.