எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்பட்ட விவகாரம்: மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி விமர்சனம்


எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்பட்ட விவகாரம்: மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி விமர்சனம்
x
தினத்தந்தி 22 Nov 2019 8:30 AM IST (Updated: 22 Nov 2019 8:30 AM IST)
t-max-icont-min-icon

தனது குடும்பத்தினருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்பட்டதை பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ்  இடைக்கால தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு (மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி) இதுவரை எஸ்.பி.ஜி. என்று அழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்களின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இதேபோல், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அவரது மனைவி குர்சரண் கவுர் ஆகியோருக்கும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

மத்திய அரசு சமீபத்தில் அதிரடியாக சோனியா காந்தி, மன்மோகன் சிங் குடும்பத்தினருக்கு அளித்து வந்த இந்த பாதுகாப்பை ரத்து செய்து விட்டது. அதற்கு மாற்றாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இசட்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. பாராளுமன்றத்திலும், இவ்விவகாரத்தால் அமளி ஏற்பட்டது.

இந்த சூழலில், பிரியங்கா காந்தியிடம் எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி,  "இதுவும் அரசியல்தான், இது போன்ற நிகழ்வுகள் அரசியலில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்" என்றார்.


Next Story