தேசிய செய்திகள்

பாஜகவுடன் மீண்டும் கைகோர்க்க திட்டமா? சிவசேனா பதில் + "||" + Sena won't side with BJP even if offered Indra's throne: Raut

பாஜகவுடன் மீண்டும் கைகோர்க்க திட்டமா? சிவசேனா பதில்

பாஜகவுடன் மீண்டும் கைகோர்க்க திட்டமா? சிவசேனா பதில்
முதல் மந்திரி பதவியை பகிர்ந்து கொள்ள பாஜக சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவருவது பற்றி சஞ்சய் ராவத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மும்பை,

பாரதீய ஜனதா, சிவசேனா இடையேயான முதல்-மந்திரி பதவி போட்டியால் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், இந்த கூட்டணி ஆட்சி அமைந்தால் முதல் 2½ ஆண்டுகள் சிவசேனாவும், அடுத்த பாதியில் தேசியவாத காங்கிரசும் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்ளும் என தெரிவித்தார்.

இந்த நிலையில், மும்பையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்,  என்.சி.பி, காங்கிரஸ், சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்கும் போது, சிவசேனாவுக்கே முதல் மந்திரி பதவி ஒதுக்கப்படும்.  உத்தவ் தாக்ரேதான் முதல் மந்திரியாக வேண்டும் என்று மராட்டிய மக்கள் விரும்புகின்றனர்” என்றார்.

அப்போது செய்தியாளர்கள் சஞ்சய் ராவத்திடம், முதல் மந்திரி பதவியை பகிர்ந்து கொள்ள பாஜக சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றனவே? என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், பாஜகவுக்கு வழங்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. நாக்பூர் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் தோல்வி: பா.ஜனதா மீது கிராமப்புற மக்கள் அதிருப்தி; சிவசேனா சொல்கிறது
நாக்பூர் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பாரதீய ஜனதா தோல்வி அக்கட்சி மீது கிராமப்புற மக்கள் அதிருப்தியில் உள்ளதை காட்டுகிறது என சிவசேனா தெரிவித்து உள்ளது.
2. வீர சாவர்க்கர் பற்றி சர்ச்சை கருத்து: காங்கிரசின் புத்தகத்துக்கு சிவசேனா எதிர்ப்பு
வீர சாவர்க்கர் பற்றி காங்கிரசின் சேவா தள பிரிவு வெளியிட்டுள்ள புத்தகத்துக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
3. பாஜகவுக்கு துரோகம் இழைத்துவிட்டது சிவசேனா : தேவேந்திர பட்னாவிஸ் கடும் தாக்கு
பாஜகவுக்கு, சிவசேனா துரோகம் இழைத்துவிட்டதாக மராட்டிய முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடுமையாக சாடினார்.
4. மராட்டியம் ; உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு மந்திரி சபையில் இடம்
மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
5. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே அரசின் நண்பர்களாக மாறுவார்கள்; சிவசேனா சொல்கிறது
பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே அரசின் நண்பர்களாக மாறுவார்கள் என சிவசேனா தெரிவித்து உள்ளது.