வகுப்பறையில் பாம்பு கடித்து உயிரிழந்த மாணவி தொடர்ந்து பாடம் நடத்திய ஆசிரியர்
கேரள மாநிலத்தில் பள்ளி வகுப்பறையில் பாம்பு கடித்து 10 வயது மாணவி உயிரிழந்தார். ஆனால் ஆசிரியர் தொடர்ந்து பாடம் நடத்தி உள்ளார்.
வயநாடு
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பாத்தேரியில் பள்ளிக்கூடம் ஒன்றில் 5 ம் வகுப்பில் ஆசிரியை பாடம் எடுத்து கொண்டு இருந்தார். அப்போது மாணவி ஷெஹலாவை பாம்பு கடித்து உள்ளது. உடன் இருந்த மாணவிகள் ஆசிரியரிடம் கூறி உள்ளனர். ஆனால் ஆசிரியர் அதை கேட்காமல் மாணவியை அவரது தந்தை வந்து மருத்துவமனை அழைத்துச் செல்வார் என கூறி விட்டு தொடர்ந்து பாடம் நடத்தி கொண்டு இருந்தார்.
பாம்பு கடித்த மாணவியின் கால் ஊதா நிறத்திற்கு மாறி உள்ளது. ஆனால், மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல் மாணவியின் பெற்றோருக்கு ஆசிரியர் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பே மாணவி இறந்தார். மாணவியை உடனே சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாத வகுப்பு ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து அரசுப் பள்ளிகளில் வசதியை மேம்படுத்தமாறு முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு வயநாடு எம்.பி. ராகுல் காந்தி கடிதம் மூலம் வலியுறுத்தி இருக்கிறார்.
வயநாடு மாவட்ட ஆட்சியர் அடீலா அப்துல்லா இந்த சம்பவம் "மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று குறிப்பிட்டார் மற்றும் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
குழந்தைக்கு மருத்துவ உதவி தாமதமாக வந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க கல்வித் துறை அதிகாரி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story