காஷ்மீரின் சில இடங்களில் வன்முறை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு


காஷ்மீரின் சில இடங்களில் வன்முறை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2019 12:34 PM IST (Updated: 22 Nov 2019 12:34 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் சில இடங்களில் வன்முறை வெடித்ததால், இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன் தினம் பாராளுமன்றத்தில் பேசுகையில் தெரிவித்தார். அமித்ஷா, இவ்வாறு கூறிய மறுநாளே, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் சில இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.

இதனால், அங்குள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.  பயங்கரவாதிகளும் கடைகளை திறக்கக் கூடாது என்று எச்சரித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளதால்,  அங்கு 3-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

பொது போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது.  சில இடங்களில் வன்முறை வெடித்தாலும், காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

Next Story