தேசிய செய்திகள்

வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 34 ஆயிரம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் அதிர்ச்சி தகவல் + "||" + 34,000 Indians died in Gulf in five years, 1,200 from Telangana

வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 34 ஆயிரம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் அதிர்ச்சி தகவல்

வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 34 ஆயிரம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் அதிர்ச்சி தகவல்
வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 34 ஆயிரம் இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியுறவுத்துறை அதிர்ச்சி புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி

குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளில் நாள்தோறும் சராசரியாக 15 இந்தியர்கள் உயிரிழப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அவர், வளைகுடா நாடுகளில் 2014ஆம் ஆண்டு முதல் 33,988 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 823 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2014-ஆம் ஆண்டில் 5388 பேரும், 2015-ல் 5786 பேரும், 2016 ஆம் ஆண்டில் 6013 பேரும், 2017 ஆம் ஆண்டில் 5604 பேரும், 2018-ஆம் ஆண்டில் 6014 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இருநாடுகளில்தான் அதிக அளவில் உயிரிழப்புகள் நேரிட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்களில் அதிகபட்சமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 1200 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இத்தாலியில் இருந்து இந்தியர்கள் 263 பேர் டெல்லி திரும்பினர்; கண்காணிப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்
இத்தாலியில் இருந்து டெல்லி திரும்பிய இந்தியர்கள் 263 பேர், கண்காணிப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
2. ரோம் நகரில் தவிக்கும் இந்தியர்களை மீட்க தனி விமானம்
ரோம் நகரில் தவிக்கும் இந்தியர்களை மீட்க தனி விமானம் அனுப்பப்பட்டுள்ளது.
3. மலேசியாவில் தவித்து வரும் இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை - ஜெய்சங்கர் தகவல்
மலேசியாவில் தவித்து வரும் இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
4. ஈரானில் உள்ள 300 இந்தியர்கள் இன்று மஹான் ஏர் விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர்
ஈரானில் உள்ள 300 இந்தியர்கள் இன்று மஹான் ஏர் விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர் என விமானப் போக்குவரத்து மந்திரி தெரிவித்துள்ளார்.
5. கொரோனா வைரஸ் பிடியில் சிக்கியுள்ள ஈரான் நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்க நடவடிக்கை - மத்திய அரசு தகவல்
கொரோனா வைரஸ் பிடியில் சிக்கியுள்ள ஈரானில் இருந்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.