தேசிய செய்திகள்

பீகாரில் பட்டப்பகலில் பயங்கரம்: நிதி நிறுவனத்தில் 55 கிலோ தங்கம் கொள்ளை - துப்பாக்கிமுனையில் கைவரிசை + "||" + Daylight Terror in Bihar: 55kg of gold looted in financial institution - handgun in gunpowder

பீகாரில் பட்டப்பகலில் பயங்கரம்: நிதி நிறுவனத்தில் 55 கிலோ தங்கம் கொள்ளை - துப்பாக்கிமுனையில் கைவரிசை

பீகாரில் பட்டப்பகலில் பயங்கரம்: நிதி நிறுவனத்தில் 55 கிலோ தங்கம் கொள்ளை - துப்பாக்கிமுனையில் கைவரிசை
பீகாரில் பட்டப்பகலில், நிதி நிறுவனத்தில் துப்பாக்கிமுனையில் 55 கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பாட்னா,

கேரள மாநிலம், கொச்சியை தலைமையகமாக கொண்டு செயல்படுவது முத்தூட் நிதி நிறுவனம். தங்க நகை அடமானத்தின்பேரில் கடன் வழங்குவதில் இந்த நிறுவனம், முன்னணியில் உள்ளது. இதன் கிளைகள் கேரளா, தமிழ்நாடு மட்டுமல்லாது வட மாநிலங்களிலும் உள்ளன. பீகார் மாநிலம், ஹாஜிப்பூர் நகரத்தில் சினிமா சாலையில் இதன் கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று வழக்கம் போல இந்த கிளை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. வாடிக்கையாளர்கள் பலரும் அங்கு வந்திருந்தனர்.


இந்த நிலையில் மதியம் சுமார் 12.30 மணிக்கு, பட்டப்பகலில் 7 கொள்ளையர் துப்பாக்கிகளுடன் அங்கு சென்றனர். வாயிலில் இருந்த காவலர்களை தாக்கி விட்டு திபுதிபுவென நிறுவனத்துக்குள் நுழைந்தனர். அவர்களை பார்த்ததும் அங்கு பணியில் இருந்தவர்களும், வாடிக்கையாளர்களும் பதறிப்போயினர். அந்த நிறுவனத்தின் நிர்வாகியை கட்டிப்போட்டனர். ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் கொள்ளையர்கள் துப்பாக்கிமுனையில் பிணைக்கைதிகளாக பிடித்தனர்.

இதையடுத்து அங்கு இருந்த 55 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தனர். அவற்றை தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த பைகளில் நிரப்பிக்கொண்டு, அவர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் பறந்தனர்.

பதற்றத்தில் இருந்து மீண்ட உடன் அந்த நிறுவனத்தின் நிர்வாகி, டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.21 கோடி என தகவல்கள் கூறுகின்றன.

இந்த கொள்ளை சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதாவால் பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிதிஷ்குமார் -கருத்துக் கணிப்பு
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அணி மீண்டும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
2. பீகாரில் பா.ஜ.க. கூடுதல் இடங்களை வென்றால் முதல்-மந்திரி யார்? அமித்ஷா பரபரப்பு பேட்டி
பீகாரில் பா.ஜ.க. கூடுதல் இடங்களை வென்றால் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பது குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்தார்.
3. பீகாரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; தாய்-மகனை கால்வாயில் வீசிச் சென்ற கும்பல்
பீகார் மாநிலம் பக்சரில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த 7 பேர் கொண்ட கும்பல் அவரையும் அவருடைய மகனையும் தாக்கி கால்வாயில் வீசிச் சென்றுள்ளது.
4. பீகார் சட்டப் பேரவை தேர்தல் கூட்டணி - ஜெ.பி. நட்டா, அமித்ஷா முக்கிய ஆலோசனை
பீகார் சட்டப் பேரவை தேர்தல் குறித்து டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
5. பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.