தேசிய செய்திகள்

பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை - சரத்பவார் + "||" + No question of forming alliance with BJP, Ajit's statement misleading: Sharad Pawar

பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை - சரத்பவார்

பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை - சரத்பவார்
பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மும்பை,

மராட்டியத்தில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் பா.ஜனதா, அஜித்பவார் ஆதரவுடன் ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. இது சட்ட விரோதமானது என சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனு அவசர மனுவாக நீதிபதிகள் என்.வி. ரமணா, அசோக்பூஷண், சஞ்சீவ் கண்ணாஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரித்தது. முடிவில் தேவேந்திர பட்னாவிசுக்கு ஆதரவாக வழங்கப்பட்டது மற்றும் கவர்னர் அழைப்பு விடுத்தது ஆகிய 2 கடிதங்களை கோர்ட்டில் நாளை ( 25ம் தேதி) தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்னர் நாளை காலை நடக்கும் விசாரணையில்  உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனிடையே மராட்டிய துணை முதல்-மந்தி அஜித் பவார் தனது டுவிட்டரில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் தொடர்ந்து நீடிப்பதாகவும், தங்களின் தலைவர் சரத் பவார் தான் என்றும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு பா.ஜனதா- தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி நிலையான ஆட்சியை மகாராஷ்டிராவில் கொடுக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “சிவசேனா- காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி என்பது ஒருமித்தமாக எடுத்த முடிவு. பா.ஜனதாவுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது என்று அஜித் பவார் தெரிவித்திருப்பது தவறானது. அது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி தவறாக வழிநடத்தும்” என்று பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கபாலிபெட்டாவில் இயேசு சிலை அமைக்க எதிர்ப்பு: கனகபுராவில் அமைதியை சீர்குலைக்க முயற்சி - பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மீது டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
கபாலிபெட்டாவில் இயேசு சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கனகபுராவில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போராட்டம் நடத்த உள்ளனர். இதனால் அவர்கள் அங்கு அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்வதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
2. மராட்டியத்தில் 6 மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி; காங்கிரசுக்கு 2-வது இடம்
நாக்பூர், அகோலா, வாசிம், துலே, நந்தூர்பர், பால்கர் ஆகிய 6 மாவட்ட பஞ்சாயத்துகளில் உள்ள 332 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
3. பா.ஜனதா- சிவசேனா ஆட்சி அமையும் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை
மராட்டியத்தில் பா.ஜனதா - சிவசேனா ஆட்சி அமையும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
4. பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ரகசிய ஒப்பந்தமா? முதல்-மந்திரியின் அரசியல் ஆலோசகர் எஸ்.ஆர்.விஸ்வநாத் பதில்
பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறப்பட்ட தகவலுக்கு முதல்-மந்திரியின் அரசியல் ஆலோசகர் எஸ்.ஆர்.விஸ்வநாத் பதிலளித்துள்ளார்.
5. மராட்டியத்தில் பா.ஜனதாவால் ஆட்சி அமைக்க முடியுமா? பதில் அளிக்குமாறு கவர்னர் கடிதம்
மராட்டியத்தில் பாரதீய ஜனதாவால் ஆட்சி அமைக்க முடியுமா? என்பது குறித்து பதிலளிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு கவர்னர் கடிதம் அனுப்பினார்.