பிரதமர் மோடி குறிப்பிட்ட பாரதியார் பாடல்


பிரதமர் மோடி குறிப்பிட்ட பாரதியார் பாடல்
x
தினத்தந்தி 24 Nov 2019 8:29 PM GMT (Updated: 24 Nov 2019 8:29 PM GMT)

பிரதமர் மோடி ‘மன் கி பாத்‘ உரையில் பாரதியார் பாடலை குறிப்பிட்டு பேசினார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தனது நேற்றைய ‘மன் கி பாத்‘ உரையில், பாரதியார் பாடலை குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:-

தாய்மொழி அறிவு இல்லாமல் உயர்வு சாத்தியமில்லை. இன்றிலிருந்தே, உங்கள் தாய்மொழி அல்லது வழக்கு மொழியையே பயன்படுத்தத் தொடங்குங்கள். குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் உத்வேகம் அளியுங்கள்.

மகாகவி சுப்ரமணிய பாரதியார், தமிழ் மொழியில் என்ன கூறியிருக்கிறார் என்று பார்க்கலாம். அவரது இந்த வரிகள் நம் அனைவருக்கும் பெரும் உத்வேகம் அளிப்பவையாக இருக்கின்றன.

‘‘முப்பது கோடி முகமுடையாள் உயிர்

மொய்ம்புற ஒன்றுடையாள்–இவள்

செப்புமொழி பதினெட்டுடையாள் எனிற்

சிந்தனை ஒன்றுடையாள்‘‘

அந்த காலத்தில் பாடப்பட்டவை இவை. பாரத அன்னைக்கு 30 கோடி முகங்கள் உள்ளன. ஆனால் உடல் ஒன்றுதான். அவளுக்கு 18 மொழிகள் இருக்கின்றன. ஆனால் எண்ணம் ஒன்றுதான் என்று எழுதி இருக்கிறார். இவ்வாறு மோடி பேசினார்.



Next Story