‘சுப்ரீம் கோர்ட்டுக்கு வானமே எல்லை’ - மூத்த நீதிபதி கருத்து


‘சுப்ரீம் கோர்ட்டுக்கு வானமே எல்லை’ - மூத்த நீதிபதி கருத்து
x
தினத்தந்தி 24 Nov 2019 9:31 PM GMT (Updated: 24 Nov 2019 9:31 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டுக்கு வானமே எல்லை என மூத்த நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மராட்டிய கவர்னருக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தொடுத்த வழக்கை, நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்றபோதும் சுப்ரீம் கோர்ட்டு அவசர வழக்காக விசாரித்தது.

மூத்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியபோது, பாரதீய ஜனதா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி வழக்கின் அடிப்படையை வைத்து கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர், “கவர்னர் நேற்று (சனிக்கிழமை) செய்ததை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. அரசியல் சாசனம் பிரிவு 361-ன் கீழ், அரசு அமைக்க உரிமை கோருவோரில் முதல்-மந்திரியாகவோ, பிரதமராகவோ பதவி ஏற்க யாரை அழைப்பது என்பதில் முறையே கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் விருப்ப உரிமை உண்டு” என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதி என்.வி.ரமணா, “இந்த கோர்ட்டுக்கு வானம்தான் எல்லை. யாரும் எதற்காகவும் கோரிக்கை வைக்கலாம். ஒருவர் தன்னை பிரதமர் ஆக்குமாறுகூட கோரிக்கை விடுக்கலாம்” என கருத்து தெரிவித்தார்.

Next Story