காஷ்மீரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் விரைவில் விடுவிக்கப்பட வாய்ப்பு


காஷ்மீரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் விரைவில் விடுவிக்கப்பட வாய்ப்பு
x
தினத்தந்தி 25 Nov 2019 4:29 AM GMT (Updated: 25 Nov 2019 4:29 AM GMT)

காஷ்மீரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் விரைவில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீநகர், 

 370-ஆவது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த  சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பின், ஸ்ரீநகரில் உள்ள முக்கிய அரசியல் தலைவா்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். முன்னாள் முதல் மந்திரிகளான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள். 

தற்போது, காஷ்மீரில் வேகமாக இயல்பு நிலை திரும்பி வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.  

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள சில தலைவர்கள், வார இறுதியில் தங்கள் வீடுகளுக்கு சென்றுவர அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.  காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் , மத்திய அரசிடம் இணைந்து இது குறித்து செயல் திட்டம் வகுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Next Story