தேசிய செய்திகள்

கடும் குளிரில் இருந்து காப்பாற்ற பசு மாடுகளுக்கு ஸ்வெட்டர் வாங்கும் அயோத்தி நகராட்சி + "||" + Jute coats, bonfire: Ayodhya authorities ensure cows stay warm in winter

கடும் குளிரில் இருந்து காப்பாற்ற பசு மாடுகளுக்கு ஸ்வெட்டர் வாங்கும் அயோத்தி நகராட்சி

கடும் குளிரில் இருந்து காப்பாற்ற பசு மாடுகளுக்கு ஸ்வெட்டர்  வாங்கும் அயோத்தி நகராட்சி
கடும் குளிரில் இருந்து காப்பாற்ற பசு மாடுகளுக்கு ஸ்வெட்டர் வாங்க அயோத்தி நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
லக்னோ

பசு மாடுகளுக்கு அதீத முக்கியத்துவம் தரப்படும் உத்தரபிரதேச மாநிலத்தில் பைசிங்பூரில் முதற்கட்டமாக ஆயிரத்து 200 மாடுகளுக்கும், 700 காளைகளுக்கும் கம்பளி, கையுறைகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோணிப்பை கொண்டு தயாரிக்கப்படும் ஸ்வெட்டர் ஒன்று 250 முதல் 350  ரூபாய் வரை விற்கப்படுகிறது. பசு மாடுகள் கடும் குளிரையும் சமாளிக்கும் வகையில் மூன்று அடுக்காக கோணி பைகள் வைத்து தைக்கப்பட்டுள்ளன.

அயோத்தியின் நகர் நிகாம் ஆணையர் நிராஜ் சுக்லா கூறியதாவது:-

நாங்கள் பசுக்களுக்கு கோட்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த திட்டம் மூன்று நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும். முதலாவதாக, நாங்கள் பைஷிங்பூரில் பசுக்கள் தங்குமிடத்தில் தொடங்குகிறோம், இதில் 700 காளைகள் உட்பட 1,200 கால்நடைகள் உள்ளன, மீதமுள்ளவை மாடுகள் மற்றும் கன்றுகள். கன்றுகளுக்கு 100 கோட்டுகளுக்கு ஆரம்பத்தில் ஆர்டர்  கொடுத்துள்ளோம். ஒவ்வொரு மாட்டு கோட்டுக்கும் 250-300 ரூபாய் செலவாகும் என கூறினார்.

அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநில காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு  தெரிவித்துள்ளது. குளிரில் வாடும் பள்ளி மாணவிகளுக்கு ஸ்வெட்டர் வாங்கிக்கொடுக்காத மாநில அரசு, தற்போது மாடுகளுக்கு ஸ்வெட்டர் கொடுக்க முன் வருகிறது என்று விமர்சித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குழந்தையை கடத்தி ரூ. 4 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை 12 மணி நேரத்தில் பிடித்து குழந்தையை மீட்ட போலீசார்
உத்தரப்பிரதேச 6 வயது குழந்தையை கடத்திச் சென்று 4 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய கும்பலை 12 மணி நேரத்தில் போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டனர்.
2. மர்ம நபர்களால் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பத்திரிகையாளர் மரணம்; உ.பி. அரசு ரூ.10 லட்சம் அறிவிப்பு
டெல்லி அருகே மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
3. உத்தரபிரதேசத்தில் 3 வருடத்தில் 119 என்கவுன்டர்கள்; அனைத்திலும் சட்ட மீறல்கள்
உத்தரபிரதேசத்தில் 3 வருடத்தில் 119 என்கவுன்டர்கள் அனைத்திலும் உரிய செயல்முறை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
4. கொரோனா இருப்பதாக கூறி ஓடும் பஸ்சில் இருந்து இளம் பெண் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்த இளம்பெண் திடீரென வெளியே தூக்கி வீசப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
5. உத்தரபிரதேசத்தில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீசார் சாவு; 2 ரவுடிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்
உத்தரபிரதேசத்தில் ரவுடியை பிடிக்கச்சென்றபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் நடந்த சண்டையில் 2 ரவுடிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.