அபராதம் அதிகரிக்கப்பட்ட பிறகு வாகன விபத்துக்கள் கணிசமாக குறைந்துள்ளன: மத்திய அரசு


அபராதம் அதிகரிக்கப்பட்ட பிறகு வாகன விபத்துக்கள் கணிசமாக குறைந்துள்ளன: மத்திய அரசு
x
தினத்தந்தி 26 Nov 2019 1:46 AM GMT (Updated: 26 Nov 2019 1:46 AM GMT)

அபராதம் அதிகரிக்கப்பட்ட பிறகு வாகன விபத்துக்கள் கணிசமாக குறைந்துள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி திருத்தப்பட்ட புதிய வாகன சட்டம் நாடு அமலானது. புதிய வாகன சட்டத்தின் படி, விதி மீறல்களுக்கு அபராதங்கள் கடுமையாக உள்ளதாக பரவலாக எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில்,  மோட்டார் வாகன அபராதம் அதிகரிப்பால் விபத்துகள் வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

மோட்டார் வாகன விதிமீறல் அபராதங்களை கடுமையாக்கிய பின்னர் புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் சாலை விபத்துகள் வெகுவாக குறைந்துள்ளன. இத்தகவலை சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புதுச்சேரியில் 31% சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக அமைச்சர் கட்கரி தெரிவித்துள்ளார். சண்டிகரில் 75%, உத்தராகண்டில் 22%, குஜராத்தில் 14%, பீகாரில் 10.5%, கேரளாவில் 2.1% விபத்துகள் குறைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Next Story