அரசியல் அமைப்பு சட்டத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதலில் குரல் கொடுப்பது தி.மு.க. தான் - தயாநிதிமாறன் பேட்டி


அரசியல் அமைப்பு சட்டத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதலில் குரல் கொடுப்பது தி.மு.க. தான் - தயாநிதிமாறன் பேட்டி
x
தினத்தந்தி 26 Nov 2019 9:29 PM GMT (Updated: 26 Nov 2019 9:29 PM GMT)

அரசியல் அமைப்பு சட்டத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதலில் குரல் கொடுப்பது தி.மு.க. தான் என்று தயாநிதிமாறன் தெரிவித்தார்.

புதுடெல்லி,

அரசியல் அமைப்பு சாசனத்தின் 70-வது ஆண்டுவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல் அமைப்பு சாசனத்தின் 70-வது ஆண்டை பாராட்டியும், அதே சமயத்தில் அதற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்றும் தி.மு.க. பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் ஒரு சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் சமீப கால நடவடிக்கைகளை பார்க்கும்போது மத்திய அரசு அப்படி இல்லை. குறிப்பாக காஷ்மீரில் அரசியல் அமைப்பு சாசனத்தை களங்கப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக மராட்டிய மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாமல், அரசியல் அமைப்பு சட்டத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது.

2 நாட்களுக்கு முன்பு அரசியல் அமைப்பு சட்டத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு இங்கு அரசியல் அமைப்பை பாராட்ட விழா எடுப்பது வேதனைக்கு உரியது. எப்போதெல்லாம் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் அதனை எதிர்த்து முதலாவதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் குரல்தான் ஒலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story