தேசிய செய்திகள்

திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி சந்திப்பு + "||" + Delhi: Congress leaders Rahul Gandhi and Priyanka Gandhi Vadra arrive at Tihar Jail to meet Congress leader P Chidambaram

திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி சந்திப்பு

திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி சந்திப்பு
திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சந்தித்தனர்.
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ-யால், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி  கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.  

சிபிஐ தொடர்ந்த வழக்கில், சிதம்பரத்திற்கு  சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. ஆனால், அதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 16-ந்தேதி ப.சிதம்பரத்தை கைது செய்தனர். 

இதனால், கடந்த  3 மாதமாக  திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், தனக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த சூழலில்,  இன்று காலை திகார் சிறை சென்ற  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும்   பிரியங்கா காந்தி  ஆகியோர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினர்.


தொடர்புடைய செய்திகள்

1. இயற்கையை நாம் பாதுகாத்தால்தான் இயற்கை நம்மை பாதுகாக்கும்: ராகுல் காந்தி டுவிட்
இயற்கையை நாம் பாதுகாத்தால்தான் இயற்கை நம்மை பாதுகாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2. ரக்‌ஷா பந்தன்: நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ராகுல் காந்தி டுவிட்
ரக்‌ஷா பந்தனையொட்டி நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3. 576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்? ராகுல் காந்தி கேள்வி
576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
4. இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது: ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் - ராகுல் காந்தி
இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது, ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
5. பா.ஜனதா எம்.பி அனில் பலூனியை தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்த பிரியங்கா காந்தி
பா.ஜனதா எம்.பி.யும் ஊடகப்பிரிவு தலைவருமான அனில் பலூனியை தேநீர் விருந்துக்கு பிரியங்கா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.