தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 7 பேர் டெல்லி விமான நிலையத்தில் கைது + "||" + Delhi: 7 Afgan nationals held, Heroin worth Rs.9.5 crore seized

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 7 பேர் டெல்லி விமான நிலையத்தில் கைது

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 7 பேர் டெல்லி விமான நிலையத்தில் கைது
போதைப் பொருட்களை கடத்தியதற்காக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 7 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த 7 பயணிகள் தங்களுடன் போதைப் பொருட்களை எடுத்து வந்தது  கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்கள் 7 பேரும் 1,957 கிராம் எடை கொண்ட 214 போதை மாத்திரைகளை விழுங்கி கடத்திச் செல்ல முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த போதை மாத்திரைகளின் மொத்த மதிப்பு 9 கோடியே 78 ஆயிரத்து 50 ஆயிரம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் இருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். தற்போது அந்த 7 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 16 பேர் கொன்று குவிப்பு: ராணுவம் அதிரடி
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி வான்தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 16 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
2. ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச்சண்டை: 7 தலீபான் பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கிச்சண்டையில், 7 தலீபான் பயங்கரவாதிகள் பலியாயினர்.
3. ஆப்கானிஸ்தானில் 40 தலீபான் பயங்கரவாதிகள் சரண்
ஆப்கானிஸ்தானில் 40 தலீபான் பயங்கரவாதிகள் அரசு படையினரிடம் சரணடைந்தனர்.
4. ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலியாயினர்.
5. ஆப்கானிஸ்தானில் அமைதி பணியில் ஈடுபட்ட 26 பேர் கடத்தல்: தலீபான்கள் அட்டூழியம்
ஆப்கானிஸ்தானில் அமைதி பணியில் ஈடுபட்ட 26 பேரை தலீபான்கள் கடத்திச் சென்றனர்.