தேசிய செய்திகள்

மராட்டிய முதல் மந்திரி பதவி ஏற்பு விழா; மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு + "||" + Maharastra CM swearing in ceremony; MK Stalin invited

மராட்டிய முதல் மந்திரி பதவி ஏற்பு விழா; மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

மராட்டிய முதல் மந்திரி பதவி ஏற்பு விழா; மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
மராட்டிய முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கின்றன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மராட்டியத்தின் முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் மற்றும் மகா விகாஸ் அகாடி தலைவரான உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்கிறார். இதற்கான நிகழ்ச்சிகள் நாளை மாலை 6.40 மணிக்கு மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெற உள்ளன. இதனையடுத்து விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

மராட்டிய முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளும்படி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடப்பட்டு உள்ளது.

இதேபோன்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு மாநில காங்கிரஸ் முதல் மந்திரிகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில்  பங்கேற்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, சிவசேனா சார்பில் அழைப்பு விடப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜார்கண்ட் முதல் மந்திரி பதவியேற்பு விழா; மு.க. ஸ்டாலின் ராஞ்சிக்கு புறப்பட்டார்
ஜார்கண்ட் முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள மு.க. ஸ்டாலின் ராஞ்சிக்கு புறப்பட்டு சென்றார்.
2. ஜார்கண்ட் முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் டிசம்பர் 29ல் பதவியேற்பு
ஜார்கண்ட் முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் டிசம்பர் 29ல் பதவியேற்கிறார்.
3. ஜார்கண்ட் முதல் மந்திரி பதவியில் இருந்து ரகுபர் தாஸ் ராஜினாமா
ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவை அடுத்து முதல் மந்திரி பதவியில் இருந்து ரகுபர் தாஸ் ராஜினாமா செய்துள்ளார்.
4. மராட்டிய முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார்
மராட்டிய முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று முறைப்படி பொறுப்பேற்று கொண்டார்.
5. மராட்டியத்தில் முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்று கொண்டார்
மராட்டியத்தில் முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே முறைப்படி இன்று பதவியேற்று கொண்டார்.