தூத்துக்குடி தொகுதி தேர்தல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி மேல்முறையீடு


தூத்துக்குடி தொகுதி தேர்தல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி மேல்முறையீடு
x
தினத்தந்தி 28 Nov 2019 11:15 PM GMT (Updated: 28 Nov 2019 9:58 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார்.

புதுடெல்லி, 

கனிமொழியின் வெற்றிசெல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சந்தானகுமார் என்ற வாக்காளர் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி எம்.பி. ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கனிமொழிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வழக்குதான் என்று கூறி கனிமொழியின் மனுவை கடந்த 19-ந்தேதி தள்ளுபடி செய்தது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை ரத்துசெய்யக்கோரியும், தன் மீதான தேர்தல் வழக்கை ரத்து செய்யக்கோரியும் கனிமொழி எம்.பி. தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story