தேசிய செய்திகள்

கேரளாவை சேர்ந்த கவிஞர் அக்கிதமுக்கு ஞானபீட விருது + "||" + Kerala-based poet Akitam received the Jnanpith Award

கேரளாவை சேர்ந்த கவிஞர் அக்கிதமுக்கு ஞானபீட விருது

கேரளாவை சேர்ந்த கவிஞர் அக்கிதமுக்கு ஞானபீட விருது
கேரளாவை சேர்ந்த கவிஞர் அக்கிதமுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு,

எழுத்துலகில் சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் ஞானபீட விருது வழங்கப்படுகிறது. இந்திய இலக்கிய துறையின் மிக உயரிய விருதான ஞானபீட விருது, இந்த ஆண்டு மலையாள கவிஞர் அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி என்ற அக்கிதமுக்கு (வயது 93) அறிவிக்கப்பட்டு உள்ளது.


மலையாள இலக்கியத்துறையின் எளிய கவிஞர் என புகழப்படும் அக்கிதம், இதயத்தை ஈர்க்கும் உணர்வுப்பூர்வ படைப்புகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இதனால் கேரளாவின் இலக்கிய மேதை என அழைக்கப்பட்டு வருகிறார். 45-க்கும் மேற்பட்ட கவிதை, சிறுகதை, நாடக தொகுப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.

‘இருபதாம் நூற்றாண்டின்றே இதிகாசம்’ என்ற அவரது கவிதை தொகுப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இதைப்போல அக்கிதம் மொழிபெயர்த்து வெளியிட்ட ஸ்ரீமத் பாகவதம், அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய மதிப்புமிக்க நூலாக இன்றுவரை புகழப்படுகிறது.

அக்கிதமுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டு இருப்பதன் மூலம், மலையாள இலக்கியத்துறையில் இந்த விருதை பெறும் 6-வது கவிஞர் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் 2- வது நாளாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2. கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த நேரிடும்: சுகாதாரத்துறை மந்திரி எச்சரிக்கை
கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது.
3. கேரளாவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு- இன்று ஒரே நாளில் 6,477 -பேருக்கு தொற்று
கேரளாவில் இன்று ஒரே நாளில் 6,477 -பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் அதிகபட்ச அளவாக ஒரே நாளில் 6,324 பேருக்கு கொரோனா
கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 6,324 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5. கேரளாவில் இதுவரை இல்லாத உச்சம்; ஒரே நாளில் 5,376-பேருக்கு கொரோனா
கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.