தேசிய செய்திகள்

சட்டக்கல்லூரி மாணவி கடத்தி கற்பழிப்பு; 12 பேர் கும்பல் கைது + "||" + Law student abducted and raped; 12 people arrested for gang rape

சட்டக்கல்லூரி மாணவி கடத்தி கற்பழிப்பு; 12 பேர் கும்பல் கைது

சட்டக்கல்லூரி மாணவி கடத்தி கற்பழிப்பு; 12 பேர் கும்பல் கைது
சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கடத்தி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் 12 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ராஞ்சி,

ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சி புறநகர் பகுதியில் மாலை நேரத்தில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் ஆண் நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 12 பேர் கும்பலாக பயங்கர ஆயுதங்களுடன் வந்து அவர்களை வழிமறித்தனர். பின்னர் ஆண் நண்பரை தாக்கி விரட்டியடித்த அவர்கள், மாணவியை கடத்திச் சென்றனர். அருகில் இருந்த ஒரு செங்கல் சூளையில் வைத்து மாணவியை அவர்கள் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.


இது குறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள், ஒரு கைத்துப்பாக்கி, 8 செல்போன்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவியிடம் இருந்து பறிக்கப்பட்ட ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


ஆசிரியரின் தேர்வுகள்...